சர்வதேச மகளிர் தின விழா மேக்னம் சார்பில் கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மேக்னம் நிறுவனத்தில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-03-09 00:50 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மேக்னம் நிறுவனத்தில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் மேக்னம் செயலாளர் பி. சக்திவேல், அனைவரையும் வரவேற்று வாழ்த்து பேசினார். தொடர்ந்து தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளர் எஸ். அருள்முருகன் அவர்கள் இந்த விழாவில் பங்கேற்று தலைமை வகித்தார்.

தொடர்ந்து அவர் மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மகளிர் தின பெருமைகள் மேலும் பெண்கள் தங்கள் வாழ்வில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர் ஒவ்வொரு பெண்மணிகளும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து பல துறைகளில் இன்று முன்னேறி வருகின்றனர்.

அதேபோல நீங்கள் வீட்டில் முடங்கி கிடக்காமல் தங்களுக்குள் உள்ள திறமைகளை கண்டு ஒவ்வொருவரும் சிறப்பாக செயல்பட்டு உங்களது வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும், எனவும் மேலும் மகளிர் குழு பற்றிய விவரங்களும் அவர் எடுத்துரைத்து ஒவ்வொருவரும் குழுவில் எவ்வாறு பயனடைய முடியும் எனவும் விரிவாக எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து தமிழ்நாடு கிராம வங்கி கிளை மேலாளர் கோபால கண்ணன், மற்றும் ஆண்டகளூர்கேட் கிளை மேலாளர் திருமதி. ஸ்ரீமதி, பேளுக்குறிச்சி கிளை மேலாளர் திருமதி. சங்கீதா ஆகியோர் மகளிர் தின விழாவை குறித்து பெண்களிடத்தில் தெளிவாக எடுத்து கூறினர். மேலும் தொழில் முனைவோர் பயிற்சியாளர் திருமதி காயத்ரி அவர்கள் அன்றும் இன்றும் பெண்கள் என்ற தலைப்பில் மகளிர் இடத்தில் பல்வேறு சந்தேகங்களுக்கு விரிவாக பதில் அளித்து மகளிர் தின விழா சிறப்புரையாற்றினார்.

மேலும் ஹோமியோபதி மருத்துவர் செந்தில்குமார் பெண்களின் உடல் நலமும் மருத்துவமும் குறித்து எடுத்துக் கூறினார். விழாவில் கலந்து கொண்ட மண்டல மேலாளர் அவர்களுக்கும் மற்றும் கிளை மேலாளர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து நினைவு பரிசு மேக்னம் செயலாளர் பி. சக்திவேல், அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

இதே போல் பல்வேறு சாதனைப் பெண்மணிகளுக்கு அதாவது வெண்பா எஃப் பி. ஓ இயக்குனர் எஸ் .ஜானகி, ஆரா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் திருமதி. கே. ரேணுகாதேவி, மேக்னம் நிறுவனத்தில் குறுகிய கால தேனி வளர்ப்பு பயிற்சி பெற்று சாதனை படைத்த கற்பகம் அவர்களுக்கும், மேலும் ஜே. எல். ஜி. குழுவில் தொழில் கடன் பெற்று சிறப்பாக முறையில் தொழில் செய்து வரும் மற்றும் நீண்ட கால குழுவினை சிறப்பாக நடத்தி வரும் திருமதி. ராஜாமணி, கலைச்செல்வி, பெருமாயி, உமாராணி, சுதா, ஜோதி உள்ளிட்ட அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு அவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து மகளிர் தின விழாவை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது. முன்னதாக இந்த விழாவில் சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு உறுகிமொழி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

Similar News