குறிஞ்சி பெண்கள் இயக்கம் சார்பில் உலக மகளிர் தின விழா
கொடைக்கானலில் கோடை குறிஞ்சி பெண்கள் இயக்கத்தின் சார்பாக உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலை பழனி பிரிவில் இருந்து கீழ் பெருமாள் மலை வரை பெண்குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பெண்களை பாதிக்கும் கொடுமைகள், டாஸ்மாக், இலவசங்கள், பெண்களின் உரிமைகள் பற்றிய கோஷங்களை எழுப்பி கொண்டு மகளிர் குழுவினர் அனைவரும் பேரணியாக வந்தனர். பேரணி ஆடல் பாடல் உடன் கீழ் பெருமாள்மலையில் , திருமண மஹாலில் கோடை குறிஞ்சி தலைவர் வேளாங்கண்ணி தலைமையில் உலக மகளிர் தின விழா ஆரம்பமானது. கோடை குறிஞ்சி பெண்கள் இயக்கத்தின் பொருளாளர் வசந்தி வரவேற்புரை வழங்கினார்.ராணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் .கோடை குறிஞ்சி இயக்கத்தின் பணியாளர் பாரதி நன்றியுரை வழங்கினார்.
கோடைக்குறிஞ்சி இயக்கத்தில் உள்ள அனைத்து பகுதி குழு உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஆடல், பாடல் ,கவிதை, பாரம்பரிய பாடல்கள்,நாடகம், விழிப்புணர்வு பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கொடைக்கானல் காவல்துறை கண்காணிப்பாளர் , கொடைக்கானல் நகராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் ஆஷா ரவீந்திரன், அடுக்கம் ஊராட்சி தலைவர் , அடுக்கம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் , வில் பட்டி ஊராட்சி மன்றத்தின் வார்டு உறுப்பினர் பிரியா தேனி ஆண்டிபட்டி தேன் சுடர் பெண்கள் இயக்கத்தின் தலைவர் சரிதா , கோடை குறிஞ்சி பெண்கள் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் கலையரசி ,ஆலோசகர் ஷீலா , அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கல்லூரி முதல்வர் அணாட்டலின் , கொடைக்கானல் பெரும்பள்ளம் வனச்சரகர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.