கரூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சர்வதேச யோகா தின விழா
கரூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-06-21 04:58 GMT
யோகா தின விழா
கரூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சர்வதேச யோகா தின விழா கரூர் மாவட்ட பாஜக சார்பில் கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சர்வதேச உலக யோகா தினம் நிகழ்ச்சியி்ல் பாஜக கரூர் வடக்கு மாநகர தலைவர் வடிவேல் வரவேற்புரை நிகழ்த்தினார். பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையேற்று யோகா பயிற்சியை தொடங்கி வைத்தார். சர்வதேச யோகா தினம் யோகாவை அங்கீகரிக்கும் நாளாகும், இது 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து , ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மன நலம், உடல் நலம் பண்டைய இந்தியாவில் உருவான இந்த ஆரோக்கிய நடைமுறையை உலகளவில் மேம்படுத்துவது தொடர்பாக, இந்தியாவில் உருவான இந்த ஆரோக்கிய நடைமுறையை சர்வதேச யோகா தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு யோகா ஆசனங்களை செய்து காட்டினர்.