இணைய வழி குற்றவியல் விழிப்புணர்வுப் பேரணி
தென்காசியில் இணைய வழி குற்றவியல் விழிப்புணர்வுப் பேரணி நடந்தது.
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே புறப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியை தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஆய்க்குடி ஜெ. பீ. கல்லூரியின் முதல்வர் முனைவர் மைக்கேல் மரியதாஸ் மற்றும் நிர்வாகி. ஹேம்லெட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழிப்புணர்வு பேரணி தென்காசி புதிய பேருந்து நிலையத்தி லிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் வரை சென்றது. ஜெ. பீ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சார்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் இணையவழி குற்றவியல் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கொண்டு சென்று விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார். மேலும் மாவட்ட காவல்துறை சார்பில் கொடுக்கப்பட்ட துண்டறிக் கைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.