நீதிமன்ற வளாகத்தில் பெண் எஸ்.ஐ க்கு மிரட்டல் - 3 பேர் மீது வழக்கு
இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்து வந்த போது உறவினர்களுடன் பேச தடை விதித்த ஆயுதப்படை பெண் எஸ் ஐக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள செம்பொன்விளையை சேர்ந்தவர் ஐயப்பன் மகன் சிவா (25) இவர் மீது குளச்சல் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. இதே போன்று ஐயப்பன் மீதும், இளைய மகன் விஜய் (24) மீது மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது.
இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக நாகர்கோவில் சிறைச்சாலையில் இருந்த சிவா, ஐயப்பன், விஜய் ஆகியவரை ஆயுதப்படை எஸ் ஐ முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் இராணியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து வந்தனர். அப்போது அவர்கள் உறவினரிடம் பேச கட்டுப்பாடு வித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் எஸ் ஐக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து எஸ் ஐ முத்துலட்சுமி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இரணியல் போலீசார் தந்தை, மகன்கள் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.