கோடநாடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் நால்வரிடம் விசாரணை!

ஓட்டுனர்,காய்கறி விநியோகம் செய்தவர் உள்ளிட்ட நால்வரிடம் விசாரணை.

Update: 2024-04-30 06:56 GMT

சிபிசிஐடி அலுவலகம் 

கோவை:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடி போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் தனிப்படையினர் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு இருந்த நிலையில் இந்த வழக்கை தற்போது சிபிசிஐடிய போலீசார் மறுவிசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கொடநாடு எஸ்டேட்டில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ரமேஷ்,அங்கு காய்கறி சப்ளை செய்து வந்த தேவன்,இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சயானின் கோவை வீட்டின் வசித்த வீட்டின் வசித்து வந்த ரவிக்குமார் மற்றும் நம்பர் பிளேட் செய்து கொடுக்கும் அப்துல் காதர் ஆகிய நான்கு பேருக்கு இன்று ஆஜராகும் படி சம்மன் அனுப்பபட்டிருந்தது. இதனை தொடர்ந்து நான்கு பேரும் இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் துணை ஆணையர் முருகவேல் விசாரணை நடத்தி வருகிறார். இதுவரை இந்த வழக்குகளில் தொடர்புடையவர்கள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரே நேரத்தில் நான்கு பேரையும் அழைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News