வேகத்தடுப்பில் இரும்பு தகடு - வாகனங்களை மறைப்பதால் ஆபத்து

இ .சி.ஆர் சாலையில் வைக்கப்பட்டுள்ள வேகத்தடுப்பில் இரும்பு தகடு எதிரே வரும் வாகனங்களை மறைப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.

Update: 2024-02-02 04:23 GMT
வேகத்தடுப்பில் இரும்பு தகடு
திருப்போரூர் அடுத்த இ. சி. ஆர். , சாலை முட்டுக்காடு படகு குழாம் திரும்பும் இடத்தில், வேகத்தடுப்பிற்கான இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அந்த இரும்பு தடுப்பின் மத்தியில், இரும்பு தகடு அமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் படகு குழாமிற்கு செல்ல சாலையை கடக்கும்போது, எதிரே வரும் வாகனங்களை இரும்பு தகடு மறைக்கிறது. அப்போது, தடுமாற்றத்துடன் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்கின்றனர். இதனால், அங்கு விபத்து ஏற்படும் சூழலும் உருவாகிறது. எனவே, விபத்தை தவிர்க்க, இரும்பு தகடை அகற்றி மாற்று தடுப்பு அமைக்க வேண்டும். என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.
Tags:    

Similar News