வாடிக்கையாளர்களின் வாகனங்களை விற்ப்பனை செய்ததில் முறைகேடு

Update: 2023-11-20 14:59 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக வாகனங்களை விற்பனை செய்பவரை குறிவைத்து அட்வான்ஸ் மட்டுமே கொடுத்துவிட்டு வாகனத்தை வாங்கி அவற்றை விற்று உரிமையாளருக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வரும் நிகழ்வு அதிகரித்து உள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக இன்று 50-க்கும் மேற்பட்டோர் புகார் மனு மற்றும் ஆவணங்களுன் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அதாவது உதகை காந்தள் பகுதியை சேர்ந்த அயூப் என்ற அப்பாஸ் என்பவர் கடந்த சில மாதங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னோவா, ஈக்கோ ஸ்போர்ட் உள்ளிட்ட சொகுசு கார்கள், பிக்கப் போன்ற சிறிய சரக்கு வாகனங்களை 5 லட்சம் வரை விலை பேசி முன் பணமாக 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாகனங்களை வாங்கி சென்றுள்ளார்.

அதற்கு புரோ நோட், empty check போன்றவைகளை உரிமையாளர்களுக்கு கொடுப்பதுடன், பத்திரத்திலும் எழுதி கொடுத்து உள்ளார். அதன் பின்னர் அப்பாஸ் போன் செய்தாலும் எடுக்காமலும், மீதி பணத்தை கொடுக்காமலும் அலை கழிப்பதுடன் வாங்கி சென்ற காரையும் திருப்பி தராமல் உள்ளார். காவல்துறையிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் சம்பத்தபட்டவரை கைது செய்து தங்களுக்கு பணம் அல்லது தங்களுடைய வாகனத் தை பெற்று தருமாறு புகார் மனு அளித்தனர்.

Tags:    

Similar News