வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கல் - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அசூர் கிராமத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று பூத் சிலிப்கள் வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கற்பகம். நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Update: 2024-04-02 04:21 GMT

பெரம்பலூர்  மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவிக்கையில் ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்கச் செல்லும்போது வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப்புடன் வாக்காளர் அடையாள அட்டையினை எடுத்துச் செல்ல வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதபட்சத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள 12 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என வாக்காளர்களிடம் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, *அசூர் மற்றும் அந்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் போதிய அளவிலான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், குன்னம் சட்டமன்றத்தொகுதிக்கான மின்னணு வாக்கு எண்ணும் மையங்கள் வைக்கப்பட்டுள்ள வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியின் பாதுகாப்பு அறையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்றும், கல்லூரியின் அனைத்து பகுதிகளும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், பூங்கொடி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News