அமைச்சரிடம் ஈஸ்வரன் எம்எல்ஏ கோரிக்கை மனு
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சரிடம் எம் எல் ஏ கோரிக்கை மனு அளித்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-12 15:21 GMT
அமைச்சரிடம் மனு வழங்கிய எம்எல்ஏ
சென்னை, தலைமை செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு சி.வி.கணேசன் அவர்களை கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ நேரில் சந்தித்து திருச்செங்கோட்டிற்கு அரசு தொழிற்பயிற்சி நிலையம், ரிக் தொழிலாளர்களுக்கு நல வாரியம் மற்றும் திருச்செங்கோடு ESI மருத்துவமனைக்கு நிரந்தர கட்டிடம் வேண்டுமென்று கோரிக்கை வைத்து ஆலோசனை மேற்கொண்டார்.