ஐ.டி நிறுவனரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை
கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்ட நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி.;
By : King 24x7 Angel
Update: 2024-02-03 09:47 GMT
மனைவி தூக்கிட்டு தற்கொலை
சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி உமாமகேஸ்வரி (28), இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நாகராஜ் கடந்த மாதம் 21-ந் தேதி சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் இருவரும் திருப்பூரில் உறவினர் ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் நேற்று கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த உமாமகேஸ்வரி நேற்று மாலை 5 மணியளவில் வீட்டில் தூக்கில் தொங்கினார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்தரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அறிந்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் குறித்து உமாமகேஸ்வரியின் தாய் விஜயலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.