தூத்துக்குடியில் அமமுக சார்பில் ஜெ.பிறந்த நாள் விழா
தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
Update: 2024-02-25 12:51 GMT
தூத்துக்குடி மாநகர் மாவட்ட அமமுக சார்பில், மாவட்ட செயலாளர் பிரைட்டர் தலைமையில், மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முக குமாரி, மாவட்ட அம்மா பேரவை தலைவர் குமார் ஆகியோர் முன்னிலையில் பழைய முனிசிபல் அலுவலகம் முன்பு அலங்கரித்து அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் தங்க மாரியப்பன், மாவட்ட துணைச்செயலாளர் முனியசாமி, முத்தையாபுரம் பகுதி செயலாளர் மதன் குமார், மாவட்ட இதய தெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளர் அகஸ்டின் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.