ஜெ., பிறந்தநாள் விழா கோலப் போட்டி

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆரணி அருகே சித்தேரியில் கோலப் போட்டி நடைபெற்றது.

Update: 2024-02-26 06:50 GMT

பரிசளிப்பு 

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆரணி அடுத்த சித்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட சக்தி நகர் பகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில் கோலப் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் எல்.ஜெய சுதா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சங்கர். திருமால். மாவட்ட ஜெ.பேரவை பாரி பாபு.ரத்தினகுமார் இலக்கிய அணி ஜெகன் ஒன்றிய துணை செயலாளர் சித்தரி சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News