ஜெ., பிறந்தநாள் பொதுக்கூட்டம் - டி.டி.வி.தினகரன் ,ஓ.பி.எஸ் பங்கேற்பு
தேனியில் அமமுக சார்பில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.;
Update: 2024-02-25 10:32 GMT
பொதுக்கூட்டம்
அமமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி பங்களாமேடு பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் பங்கேற்பு. இதில் தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அமமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் என சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.