கோடையை வரவேற்க பூத்துக்குலுங்கும் ஜெகரண்டா பூக்கள்.

கொடைக்கானலில் கோடைகாலத்தை வரவேற்கும் விதமாக சாலையோரங்களில் ஜெகரண்டா பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

Update: 2024-03-10 02:14 GMT

ஜெகரண்டா பூக்கள் 

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இயற்கை அழகினை கண்டு ரசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் தற்பொது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடைகாலம் துவங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது.

இந்த நிலையில் கொடைக்கானலில் கோடைகாலத்தை வரவேற்கும் விதமாகவும்,கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை புன்னகையோடு வரவேற்கும் விதமாக மலைச்சாலைகளில் இருபுறமும் ஜெகரண்டா மலர்கள் பூத்து குலுங்குகின்றன,மேலும் கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு மற்றும் பழனி செல்லக்கூடிய பிரதான மலைச்சாலைகளின் ஓரங்களில் உள்ள மரங்களில் இளநீல ஊதா நிறத்தில் மரம் முழுவதும் இந்த ஜெகரண்டா பூக்கள் தற்போது பூத்துள்ளன.

இந்த பூக்கள் கோடைகாலம் துவங்கும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டுமே பூக்க கூடிய பூ ஆகும், தற்போது மலைச்சாலைகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பூத்து குலுங்கும் இந்த ஜெகரண்டா பூக்களை கண்டு ரசித்தப‌டி த‌ங்கள‌து ப‌ய‌ணங்க‌ளை தொட‌ர்கின்றன‌ர், மேலும் இந்த பூக்களில் இருந்து சிட்டு குருவிகள் தேனை எடுக்கும் காட்சி பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Tags:    

Similar News