தவசிமடையில் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழி உடன் தொடக்கம்
தவசிமடையில் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-18 12:11 GMT
ஜல்லிக்கட்டு போட்டி
திண்டுக்கல் அருகே உள்ள தவசிமேடை புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது.ஆர்டிஓ கமலக்கண்ணன் போட்டிகளை துவக்கி வைத்தார். திண்டுக்கல், மதுரை,தேனி, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 720 காளைகள் 320 மாடு பிடி வீர்கள் பங்கேற்றனர்.
காளைகளுக்கும் வீரர்களுக்கும் கால்நடைத்துறையினர் மூலம் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போட்டியில் பங்கேற்பவர்களுக்கு வழங்குவதற்கு பரிசுகளும் தாராளமாக உள்ளன.