சேலம் அருகே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: 3 பேர் கைது

சேலம் அருகே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்திய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-01-27 16:20 GMT

கோப்பு படம் 

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள பெரியகவுண்டாபுரம் பகுதியில் மந்தைமேடு அருகே உள்ள மாரியம்மன் கோவில் திடலில் கடந்த 17-ந்தேதி அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதை தடுக்க முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், ஏட்டு முடியரசன் ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி பொதுமக்களை விரட்டினர். அனுமதி இன்றி ஜல்லிக்கட்டு நடத்தியதாக காரிப்பட்டி போலீசார் 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த சித்தேஷ்குமார், மூர்த்தி, சரவணன், தங்கராஜ், கண்ணன், அம்மாபேட்டையை சேர்ந்த சீனிவாசன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (27). சரவணன் (22), பிரவீன்குமார் (26) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News