மண்மங்கலத்தில் மூன்றாவது நாளாக ஜமாபந்தி நிகழ்ச்சி

மண்மங்கலத்தில் மூன்றாவது நாளாக ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2024-06-21 11:12 GMT

மண்மங்கலத்தில் மூன்றாவது நாளாக ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. மண்மங்கலத்தில் மூன்றாவது நாள் ஜமாபந்தியில் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ஆர்டிஓ இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் குணசேகரன், பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் ராதிகா, தலைமை துணை வட்டாட்சியர் மற்றும் மன்ற துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும், வருவாய் தீர்வாய அலுவலரால் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஜூன் 18ஆம் தேதி முதல் நாளும், ஜூன் 20ஆம் தேதி இரண்டாவது நாளாகவும், இன்று மூன்றாவது நாளாக ஜமாபந்தி நிகழ்ச்சி மன்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் 1433 பசலி வருவாய் தீர்வாயத்தில், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, வாரிசு சான்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்று, குடும்ப அட்டை வகுப்பு சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரி சான்று, இருப்பிட சான்று, ஆதரவற்ற விதவைச் சான்று, கணினி சிட்டா பெயர் திருத்தம், மின்சார இணைப்பு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, நில அளவை, குடிநீர், பொது சுகாதாரம், தெருவிளக்கு, சாலை வசதி, பசுமை வீடு, சிறு குரு விவசாயி சான்று மற்றும் இதர மனுக்களையும் விண்ணப்பித்து பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று மண்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மனுக்களாக அரசு அதிகாரியிடம் வழங்கி கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News