காவடி பழனியாண்டவர் கோவிலில் ஜென்ம பைரவாஷ்டமி விழா
Update: 2023-12-05 02:23 GMT
முருகன், வள்ளி, தெய்வானை
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் காவடி பழனியாண்டவர் ஆசிரமம் உள்ளது. இங்கு 13-ம் ஆண்டு ஜென்ம பைரவாஷ்டமியை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) சிறப்பு பூஜை நடக்கிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோமாதா பூஜை நடக்கிறது. 8.30 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு பைரவ ஹோமம், ருத்ர ஹோமம், சர்வதேவதா ஹோமங்களும் நடைபெறுகிறது. பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அவரவர் கைப்பட கலச பூஜை செய்து ஸ்கந்த் பைரவருக்கும், ஸ்வர்ணாகர்ஷ்ண பைரவருக்கும் அபிஷேகம் செய்வார்கள். மேலும் 64 திரவியங்களால் அபிஷேகம், ஸ்வர்ணாகர்ஷ்ண பைரவர் ரதத்தில் புறப்பாடு, கூட்டு பிரார்த்தனை, கோடஷ உபசார பூஜை, மகா தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்து வருகின்றனர்.