தொடர் விடுமுறை; மாட்டுத்தாவணியில் அதிகரித்தது மல்லிகை பூ விலை
தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூமார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தென்மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடக உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் வரவழைக்கப்பட்டு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தெலுங்குவருடப்பிறப்பு என்பதாலும், நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையிலும் மதுரை மல்லிகை பூ உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி மதுரை மல்லிகைப்பூ கிலோ - நேற்று 300 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 600ரூபாய்க்கும், முல்லை மற்றும் பிச்சிப்பூ கிலோ 400 ரூபாய்க்கும் விற்பனை - சம்மங்கி மற்றும் செவ்வந்தி 200 ரூபாய்க்கும், ரோஸ்-200ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேலும் பூக்களின் விலை அதிகரிக்கு வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.