மல்லிகைப்பூ விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
சங்கரன்கோவிலில் மல்லிகை பூ விலை உயர்ந்து, கிலோ ரூ. 3,000க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
Update: 2023-12-09 07:10 GMT
சங்கரன்கோவிலில் மல்லிகை பூ விலை உயர்ந்து, கிலோ ரூ. 3,000க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மல்லிகை பூவின் வரத்து குறைந்துள்ளது, இதனால் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் மல்லிகை பூவின் வரத்து குறைந்ததால் மல்லிகை பூவின் விலை கிடு கிடுவென உயர்ந்து ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது மல்லிகை பூவின் விலை உயர்வால் சங்கரன்கோவில் சுற்றியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.