மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி; கிலோ ரூ.180க்கு விற்பனை

காஞ்சிபுரத்தில் கிலோ மல்லிகைப்பூ ரூ. 180க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2024-03-13 15:10 GMT

  காஞ்சிபுரத்தில் கிலோ மல்லிகைப்பூ ரூ. 180க்கு விற்பனை செய்யப்பட்டது.  

காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள சிறுவாக்கம், புரிசை, புள்ளலுார், மூலப்பட்டு, மணியாச்சி, சாமந்திபுரம் உள்ளிட்ட வட்டாரங்களிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மல்லிகைப்பூ, காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் மல்லிகை தோட்டத்தில் விளைச்சல், வரத்து அதிகரித்துள்ளதால், காஞ்சிபுரத்தில் கிலோ மல்லிகைப்பூ 180 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இதுகுறித்து பூக்கடை சத்திரம் பூ மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரி சத்ரியன் கூறியதாவது: மார்கழி, தை என, இரு மாதங்களாக பனிப்பொழிவு நிலவியதால், மல்லிகைப்பூ விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால், தை, மாசி மாத முகூர்த்த நாட்களில், கிலோ மல்லிகைப்பூ 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது, பனிப்பொழிவு குறைந்துள்ளதால், மல்லிகைப்பூ விளைச்சல் அதிகரித்து, காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்திற்கு வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், முகூர்த்தம் மற்றும் பண்டிகை உள்ளிட்ட விசேஷ நாட்கள் இல்லாததால், மல்லிகைப்பூவின் தேவை குறைந்துள்ளதால், விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், கிலோ மல்லிகைப்பூ, 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News