ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டம்
திமுக வாக்குறுதியை நிறைவேற்றியதா? சிவகாசியில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொது கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இராஜேந்திரபாலாஜி கேள்வி.....
Update: 2024-02-25 12:28 GMT
இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் 30 சதவீத ஓட்டை ஓசி ஓட்டாக சத்தம் இல்லாமல் வாங்கிய திமுக அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதா? என முன்னாள் அமைச்சர் இராஜேந்திரபாலாஜி ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேச்சு: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அப்போது பேசிய அவர்,அதிமுக பாட்டாளி, படைப்பாளி எழைகளுக்காக ஆரம்பித்த இயக்கம் . மனிதன் அல்ல எம்ஜிஆர் என்ற புனிதன் ஆரம்பித்த கட்சி. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பிரசச்சை தீர்க்க முடியாத திமுக எப்படி மக்கள் பிரச்சனை தீர்க்க போகிறார்கள்.அதிமுக ஆட்சியில் சிவகாசி பட்டாசிற்கு பிரச்சனை நடந்ததா ? மாதம் , மாதம் பட்டாசு ஆலையில் சோதனை என்ற பெயரில் மாறி மாறி அதிகாரிகள் சென்றால் எப்படி பிழைப்பது என ஆவேச பேச்சு.தற்போது திமுக வினர் என்ன செய்தார்கள் என விவாதிக்க தயாரா ? என சவால் விடுத்தார்.புரட்சித்தலைவர் எம்ஜிஆர் -ன் இதயம்அம்மாவின் அனுதாபமானத்தின் ஒருங்கே பெற்ற தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார்.விடியா ஆட்சியை வெளியேற்றினால் தான் நமக்கு விடியும். இந்தியனாக வாழ்வோம் தமிழனாக எழுவோம்.எல்லா மதங்களையும் ஏற்கும் கட்சி அதிமுக என பேசினார்.