சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டம்
சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது.;
Update: 2024-02-29 05:37 GMT
ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டம்
சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி அம்மாப்பேட்டை பகுதி அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் அம்மாபேட்டை ரவுண்டானா பகுதியில் நடந்தது. பகுதி செயலாளர் யாதவமூர்த்தி தலைமை தாங்கினர். பகுதி செயலாளர் ஜெயப்பிரகாஷ் வரவேற்று பேசினார். பொதுச் செயலாளர்கள் சரவணன், முருகன், வார்டு செயலாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், பாலசுப்பிரமணியம் எம்.எல்.ஏ தலைமை கழக பேச்சாளர் மணிமுரசு, அவைத் தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் செல்வராஜ், ரவிசந்திரன் சக்திவேல் ஆகியோர் பேசினர். அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சீனிவாசன் பேசியதாவது:- திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து விலைவாசி உயர்வு, மின்கட்டணம், சொத்துவரி உயர்வால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்தனர். தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே வருகின்ற நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளும் வெற்றி பெற நீங்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து எடப்பாடி பழனிசாமி கரத்தை வலுபடுத்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.