ஜீப் கவிழ்ந்து விபத்தில் ஓட்டுநா் பலி

தென்காசி மாவட்டம் , கரிக்களம் பகுதியில் ஜீப் கவிழ்ந்து ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-25 03:41 GMT

பலியான ஓட்டுநர்

தென்காசி மாவட்டம் ,மேக்கரை மேற்குத் தொடா்ச்சி மலைப் பாதையில் 1ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வசித்து வருபவா் ரெதீஷ் (38). இவா், தனது தனது மனைவி, 2 மகன்களுடன் குடும்பத்துடன் தங்கியிருந்து மேக்கரை மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் ஜீப் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். கரடுமுரடான மலைப் பாதையில் அந்த விடுதிக்கு ரெதீஷ் தனியாக ஜீப்பில் சென்றுகொண்டு இருந்தாா்.

கரிக்களம் பகுதியில் ஜீப் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சரிவில் பின்னோக்கி வந்துள்ளது. இதனால் ஜீப்பில் இருந்து ரெதீஷ் குதித்துள்ளாா். அவா் மீது ஜீப் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். விபத்து குறித்து தகவலறிந்த அச்சன்புதூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Tags:    

Similar News