வடமதுரை அருகே நகைகள் பறிப்பு: போலீசார் விசாரணை
வடமதுரை அருகே நகைகள் பறித்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-31 13:29 GMT
கோப்பு படம்
கோவை மாவட்டம் வடமதுரை ராகுல் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ்.இவரது மனைவி ஜானகி சம்பவத்தன்று வீட்டின் அருகில் வந்த தள்ளு வண்டியில் காய்கறிகள் வாங்கி விட்டு வீட்டிற்குள் செல்ல முயன்றார்.
அப்போது அதே பகுதியில் யமாஹா இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஜானகியின் கழுத்தில் இருந்த தாலி மற்றும் செயினை பறித்து அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த ஜானகி கூச்சலட அவரது சதம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் இளைஞர்கள் தப்பி சென்றனர்.இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் வழக்கு செய்த துடியலூர் போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.