காவல் ஆய்வாளருக்கு நீதிபதி உத்தரவு

காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து திண்டுக்கல் நீதிபதி உத்தரவிட்டார்.

Update: 2024-03-22 07:14 GMT

பிடிவாரண்டு

திண்டுக்கல் தாடிக்கொம்புவை அருகே அகரம் பகுதியை சேர்ந்தவர் ராசு, கடந்த 2020-ம் ஆண்டு இவர், தாடிக்கொம்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த வேன் மோதியதில் படுகாயமடைந்த ராசு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்பெக்டராக பணியாற்றி தற்போது திருப்பூர் மாவட்டம் நல்லூர் போலீசில் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ள பாலமுருகன் என்பவர் கடந்த ஓராண்டுக்கும் மேல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு மோகனா உத்தரவிட்டார்.
Tags:    

Similar News