குழந்தைகள் விழா அடுத்த மாதம் 1,2-ந் தேதிகளில் நடத்த முடிவு!
வேலூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் விழா அடுத்த மாதம் 1,2-ந் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் அறிவியல் இயக்கம் சார்பில் வேலூர் ஒன்றிய மாநகர கிளை நிர்வாகிகளுக்கான கூட்டம் மாவட்ட அறிவியல் இயக்க அலுவலகத்தில் நடந்தது. தலைவர் கே.தேவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்தனன் பங்கேற்று, மாநில செயற்குழு கூட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
மேலும் வேலூர் குழந்தைகள் அறிவியல் விழா நடத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில் 2024-ம் ஆண்டு பள்ளி, கல்லூரி ஆசிரியர், மாணவர்கள் உள்பட 100 பேரை உறுப்பினர்களாக சேர்ப்பது. ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் பள்ளி குழந்தைகளுக்கு அறிவியல் விழா நடத்துவது. மாநில, மாவட்ட அளவிலான சிறந்த கருத்தாளர்களை பயன்படுத்துவது;கிளை அளவில் ஆர்வமுள்ள உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், கருத்தாளர்களாக உருவாக்குவது. வேலூர் மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி விகிதம் குறித்து அனைத்து பள்ளி அளவில் அறிவியல் இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது. ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள் அளவிலான கலந்துரையாடல் அரங்குகளை நடத்துவது, ஜூன் 2-வது வாரத்தில் விரிவான கிளைக் கூட்டத்தை நடத்தி, 2024 ஆண்டுக்கான கிளை செயல்பாடுகள், நிதி ஆதாரங்களை திட்டமிடுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.