தேர்தலில் மீண்டும் பிரதமராக நரேந்திரமோடி தான் வருவார் என ராசிபுரம் அருகே கே.அண்ணாமலை பேச்சு....

தற்போதைய தேர்தல் மத்தியில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி தான் வருவார் என தெரிந்தே நடைபெறும் தேர்தல் என பாஜக தலைவர் கே.அண்ணாமலை குறிப்பிட்டார்.

Update: 2024-04-05 06:33 GMT

கே.அண்ணாமலை

தற்போதைய தேர்தல் மத்தியில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி தான் வருவார் என தெரிந்தே நடைபெறும் தேர்தல் என பாஜக தலைவர் கே.அண்ணாமலை குறிப்பிட்டார். நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து வெண்ணந்தூர்ல் கே.அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். வெண்ணந்தூர் காமராஜர் சிலை முன்பாக பிரச்சாரம் மேற்கொண்ட அவர் மேலும் பேசியது: தற்போது 2024-ல் நடைபெறும் தேர்தல் சரித்திரம் வாய்ந்த தேர்தல். இந்தியாவை யார் ஆளப்போகிறார்கள் என்பதற்கான தேர்தல். நாட்டின் பிரதமராக வருவதற்கு ஒரு தகுதி வேண்டும். ஆனால் இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் என தெரியாமல் தேர்தலில் போட்டியிடுகின்றனர். பிரதமர் யார் என புரிந்து வாக்களிக்கும் கடமை மக்களுக்கு உண்டு. இந்தியாவில் பாஜக 2014-ல் ஆட்சிக்கு வந்தபோது உலகில் 11-வது பெரிய நாடாக இருந்தோம்.த ற்போது 2024-ல் 5-வது பெரிய நாடாக வளர்ந்துள்ளோம். நாட்டின் வளர்ச்சி என்பது 8 சதம். கடின உழைப்பால் இது உருவாகியுள்ளது.தனி நபர் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது. மேலும் பாஜக-வை பார்த்து சமூகநீதி பேசுகிறார்கள். மோடி ஆட்சியில் அனைவருக்கும் கான்கிரீட் வீடு திட்டம், அனைவருக்கும் காஸ் அடுப்பு, மின் வசதி இல்லா 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின் வசதிகள், விஸ்வகர்மா திட்டம் என பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மத்தியில் எந்த அமைச்சர் மீதும் குண்டூசி ஊழல் கூட சொல்ல முடியாது. அப்படி ஒரு ஆட்சி நடத்தியிருக்கிறார் மோடி. தமிழகத்தை பொருத்தவரை பல்வேறு திட்டம் நிறுத்தப்பட்டு விட்டன. தாலிக்கு தங்கம் இல்லை. நகைக்கடன் தள்ளுபடி இல்லை. டாப்லெட் தருவதாக சொன்னார்கள் இல்லை. 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றார்கள் இல்லை. தற்போது நமது வேட்பாளரை தேர்வு செய்தால் உடனடியாக காவிரி-திருமணி முத்தாறு திட்டம்,மாவட்டத்தில் வேளாண்மை ஏற்றுமதி மையம் போன்றவை ஏற்படுத்தப்படும். நமது வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அனுபவம் பெற்றவர்கள், மக்கள் பிரச்சனைகள் அவருக்கு தெரியும். கண்டிப்பாக தொகுதி வளர்ச்சி பணியாற்றுவார். தேர்தலில் 400 மக்களவை தொகுதியின் ஆதரவோடு பிரதமராக மீண்டும் மோடிதான் வருவார். எனவே இத்தொகுதியில் இவரையும்வெற்றி பெறச்செய்து பணியாற்றிட வாய்ப்பளிக்க வேண்டும். சுதந்திரதிற்கு பிறகு யார் மத்தியில் ஆட்சி அமைப்பார் என்று தெரியும். அதே போல் எமர்ஜென்க்கு பிறகு யார் ஆட்சி அமைப்பார்கள் என தெரியும். அதற்கு அடுத்து 3-வது முறையாக மீண்டும் யார் ஆட்சியமைப்பார்கள் என்றே தெரிந்து நடைபெறும் தேர்தல் என்பது மக்கள் எண்ணிப்பார்த்து வாக்களிக்க வேண்டும் என்றார். நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை விவசாய பிரச்சனை நெசவாளர் பிரச்சனை, கோழிப்பண்ணைத்தொழில் பிர்ச்சனை, லாரித்தொழில் பிரச்சனை கண்டிப்பாக தீர்ப்போம். எனவே வெற்றி பெறும் கூட்டணியான பாஜக கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பளித்து மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார்.
Tags:    

Similar News