கைலாசநாதர் திருக்கோயில் தைப்பூச தேரோட்டம்
தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோயிலில் நடந்த தைப்பூச தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Update: 2024-01-26 04:18 GMT
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருள்மிகு ஶ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் தைப்பூச திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிவகாமசுந்தரி சமேத அருள்மிகு கைலாசநாதர் சுவாமிகள் பெரிய தேரிலும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சின்ன தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் தேர் நிலையில் இருந்து பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை ஹரஹரா ஹரஹரா என கோஷமிட்டு தேர்களை இழுத்தனர். இந்த நிகழ்ச்சியில் தாரமங்கலம் காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் தலைமையில் சுமார் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தீவிபத்து நடக்காமல் இருக்க ஓமலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தாரமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.