கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கு
பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.;
Update: 2024-01-14 07:39 GMT
அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உரை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் கலந்து கொண்டு விழா பேருரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்றம் பேரவை கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், மண்டல இணை இயக்குனர் கலைச்செல்வி, பல்லடம் நகர்மன்ற தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார், பல்லடம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டனர்.