3.5 லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - ஆட்சியர் தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 3.5 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர், பெண்களின் வளர்ச்சிதான் நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பதை உணர்ந்து பெண்கள் சுயமாக வும், சுதந்திரமாக செயல்படும் வகையிலும் அவர்களின் பாது காப்பு, முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில்கொண்டும் பல்வேறு சிறப்புத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் குடும்பத்திற்கு ஆதாரமாகவும், உற்ற துணையாகவும், பாதுகாப்பாகவும் விளங்கும் குடும்பத்தலைவிகளையும், உழைக்கும் மகளிரின் நலனை கருத்தில்கொண்டும் அவர்களை பெருமைப்படுத்தும்பொருட்டு மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 1 கோடியே 6 லட்சத்து 49 ஆயிரத்து 242 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட் டத்தில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 708 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தகுதிவாய்ந்த 3 லட்சத்து 25 ஆயி ரத்து 514 மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விடுபட்ட குடும்பத்தலைவிகள், இத்திட்டத்தில் மேல்முறை யீடு செய்து பயன்பெறலாம் என முதல்-அமைச்சர் அறிவித்ததன் அடிப்படையில் மேல்முறையீடு செய்து தகுதியான பயனாளிக ளுக்கு உரிமைத்தொகை வழங்கும் வகையில் சென்னையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2-ம் கட்ட தொடக்க விழாவை தொடங்கி வைத்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் 2-ம் கட்டமாக 7 லட்சத்து 35 ஆயிரத்து 58 மகளிர்களுக்கு நவம்பர் மாதத்திற்கான ரூ.1,000, பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத் தப்பட்டது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது கட்ட மாக 22,096 மகளிர்களுக்கு நவம்பர் மாதத்திற்கான உரிமைத் தொகை ரூ.1,000, பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட் டது. விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத் தின்கீழ் முதல்கட்டமாக 3 லட்சத்து 25 ஆயிரத்து 514 மகளிர்களுக்கும், 2-ம் கட்டமாக 22,096 மகளிர்களுக்கும் என மொத்தம் 3 லட் சத்து 47 ஆயிரத்து 610 மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.