விவசாயம் வளம்பெற கலச விளக்கு வேள்வி பூஜை

தூத்துக்குடி மாவட்டம், பிள்ளையார்நததம் ஆன்மிக குரு பங்காரு அம்மா அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு பிள்ளையார்நத்தம் கிராமத்தில் விவசாயம் செழிக்க கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.

Update: 2024-03-25 01:16 GMT

விவசாயம் வளம்பெற கலச விளக்கு வேள்வி பூஜை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் 84வது அவதார பெருமங்கல விழா நடைபெற்றது. ஓம்சக்தி கொடியை குருவிகுளம் சேர்மன் விஜயலெட்சுமி ஏற்றி வைத்தார். மழைவளம் வேண்டியும், தொழில்வளம் சிறக்கவும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வாழவும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.

குருபூஜை, வினாயகர் பூஜையுடன் துவங்கிய விழாவில் அறுங்கோண சக்கரம் அமைக்கப்பட்டு முக்கோண வடிவிலான பிரதான யாககுண்டம் அமைக்கப்பட்டு கலச விளக்கு விளக்கு வேள்விபூஜை நடைபெற்றது. வேள்வியை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி முருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகளை மாவட்ட மகளிர் அணி தலைவி கே.பத்மாவதி வழங்கினார்.

அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க மாவட்ட துணைத் தலைவர் பண்டார முருகன், வட்டத் தலைவர் அழகர்சாமி, சித்தமருத்துவர் வேம்பு கிருஷ்ணன், தளவாய்புரம் மன்றம் ராஜ், இளையரசனேந்தல் முருகன், எட்டையபுரம் கன்னா, வானரமுட்டி நாறும்பூநாதன், முருகன், பிள்ளையார்நத்தம் மன்ற தலைவர் ராமலெட்சுமி, சின்ன கொண்டல்ராஜ், கோபிநாத், ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News