கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு
கள்ளக்குறிச்சியில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க.,வேட்பாளருக்கு, அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக மாவட்ட செயலாளர் குமரகுரு அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மாடூர் டோல்கேட்டிலிருந்து அ.தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர். பின் நகர அ.தி.மு.க., அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் மோகன், எம்.எல்.ஏ., செந்தில்குமார், முன்னாள் எம்.பி.,காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பிரபு, நகர செயலாளர் பாபு, ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், அய்யம்பெருமாள், தண்டபாணி, அருணகிரி, துரைராஜ், ராஜேந்திரன், பிரிவு செயலாளர்கள் வழக்கறிஞர் பிரிவு சீனுவாசன், எம்.ஜி.ஆர்.,மன்றம் தங்கபாண்டியன், பாசறை வினோத், சிறுபான்மை பிரிவு ஜான்பாஷா, அண்ணா தொழிற்சங்க அய்யாக்கண்ணு, நகர செயலாளர் ஷியாம்சுந்தர், உள்பட பலர் உடன் இருந்தனர்.