அழகர் மலையில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்ட கள்ளழகர்
அழகர் மலையில் இருந்து மதுரை நோக்கி கள்ளழகர் புறப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-21 17:13 GMT
மதுரை நோக்கி புறப்பட்ட கள்ளழகர்
கோவிந்தா கோசம் முழங்க மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர். 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும் உலக புகழ் பெற்றதுமான அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக மதுரை நோக்கி கள்ளழகர் தங்கப் பல்லக்கில் கண்டாங்கி பட்டுடுத்தி புறப்பட்டார்.
செல்லும் வழியில் அவருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வணங்கி வரவேற்கின்றனர். கோவிந்தா கோசம் முழங்க பக்தர்கள் வழிபட்ட நிலையில் செல்லும் வழியில் உள்ள மண்டகப்படியில் எழுந்தருளுகிறார் நாளை மூன்று மாவடியில் எதிர் சேவையும், நாளை மறுநாள் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள்கிறார்.