கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

உளுந்தூர்பேட்டையில் உலகதரத்தில் தொழிற்கல்வி பயிற்சி வழங்கப்படுகிறது.

Update: 2024-06-10 13:36 GMT
கள்ளக்குறிச்சி ஆட்சியர்

 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் ரூ.2,302 கோடி முதலீட்டில் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பெள சென் (Pou Chen) காலனி உற்பத்திக்கான புதிய ஆலை செயல்பட உள்ளதால், இக்காலனி தொழிற்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பணியில் சேர்வதற்கு காலனி தயாரிப்பு தொடர்புடைய பாடப் பிரிவுகளில் படிப்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தலுக்கிணங்க மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின்கீழ் மத்திய காலனி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கை அறிவிப்பு 2024-25- ஆண்டிற்கான வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மத்திய அரசின் நீண்டகாலம் மற்றும் குறுகிய கால தொழிற்கல்வி பாடப் பிரிவுகளான காலணி உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் டிப்ளமோ (Technical Supervisor - Footwear Design & Manufacturing) 2 2 5 12- வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், காலணி வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு வளர்ச்சியில் ý (Advanced Certificate Course in Footwear Design & Product Development) 1 ஆண்டுகால பயிற்சிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், காலணி உற்பத்தி தொழில்நுட்பத்தில் மேம்பட்ட சான்றிதழ் பயிற்சி Technician Footwear Manufacturing 1 ஆண்டுகால பயிற்சிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் பயிற்சி (Junior Technician) 6 மாதகால பயிற்சிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், காலணி தொழில்நுட்பத்தில் முதுகலை டிப்ளமோ (Post Graduate Diploma in Footwear Technology) ஒன்றரை ஆண்டுகால பயிற்சிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், காலணி தொழில்நுட்பத்தில் போஸ்ட் டிப்ளமோ (Post Diploma in Footwear Technology) 1 ஆண்டுகால பயிற்சிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். 

Tags:    

Similar News