கள்ளக்குறிச்சி : தீப்பிடித்து எரிந்த மின்சார வாகனத்தால் பரபரப்பு..!
கள்ளக்குறிச்சி அருகே மின்சார வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.;
By : King Editorial 24x7
Update: 2023-10-28 08:36 GMT
மின்சார வாகனம் தீப்பிடித்து எரிந்து சேதம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மார்க்கெட் வீதி தலைமை தபால் நிலையம் அருகில் ஸ்பார் ஜான்(32) என்பவர் வசித்துவருகிறார். அவரது வீட்டில் நிறுத்தப்பட்ட மின்சார ஸ்கூட்டர் சார்ஜ் செய்த போது திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் அருகில் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் மீது தீ பரவியதில் அவை எரிந்து சேதமடைந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கோவிலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவினர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.