வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி

திருக்கோவிலூரில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தாலுக்கா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

Update: 2024-03-12 04:31 GMT

சரிபார்க்கும் பணி

நாடு முழுவதும் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக அந்தந்த மாவட்டங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தேர்தலுக்கான 575 வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருக்கோவிலூருக்கு கடந்த மார்ச் 9ஆம் தேதியன்று கொண்டு வரப்பட்டு, தாலுக்கா வளாகத்தில் உள்ள இயந்திர கிட்டங்கியில் வைக்கப்பட்டது.

இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பெல் நிறுவனத்தின் பொறியாளர் ரவிக்குமார் தலைமையில் கொண்ட வல்லுநர் குழுவினரால் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் முதல் நிலை பணி நேற்று நடைபெறுகிறது.‌ இதனை வருவாய் கோட்டாட்சியர் கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டார்.இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, பாமக ,விசிக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். வல்லுநர் குழுவினரால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை பரிசோதனை செய்த பிறகு, மீண்டும் கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.‌

Tags:    

Similar News