கள்ளக்குறிச்சி : வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தில் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
Update: 2024-05-01 08:50 GMT
கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. 360 உறுப்பினர்கள் கொண்ட சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலை வழக்கறிஞர்கள் செல்வநாயகம், சண்முகம், கொளஞ்சி, ரைபின், செந்தில்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நடத்தினர். 350 உறுப்பினர்கள் ஓட்டுபோட்டு நடந்த தேர்தலில் கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்க புதிய தலைவராக சேகர், செயலாளராக பழனிவேல், பொருளாளராக ஏ.ஆர்.இளையராஜா, துணை தலைவராக ஜெய்முருகன், இணை செயலாளராக ஆர்.இளையராஜா, நுாலகர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.