உயா் கல்விக்கு வழிகாட்டும் 'கல்லூரிக் கனவு' நிகழ்ச்சி
மேல்நிலை கல்வியின் தோ்ச்சி விகிதம் அதிகரித்திருந்தாலும், உயா்கல்வி, வேலைவாய்ப்புகள் தோ்வில் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய சூழல் தொடா்ந்து கொண்டிருப்பதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் தெரிவித்தாா்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-10 04:45 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கு, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயா் கல்விக்கு வழிகாட்டும் 'கல்லூரிக் கனவு' நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் முன்னிலை வகித்து பேசியதாவது'
"பிளஸ் 2 தோ்ச்சி அடைந்த பின், உயா் கல்வி குறித்து என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்த விழிப்புணா்வு முன்பு இல்லை. தனியாா் நிறுவனங்கள் சாா்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அரசு சாா்பில் அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு மாணவா்களுக்கு வழி காட்டப்படுகிறது" என்றார்.