கூட்டணி குறித்து கமலஹாசன் தான் அறிவிப்பார்- மநீம துணைத்தலைவர்
.கூட்டணி பற்றி எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை, கமலஹாசன் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவார், எத்தனை தொகுதி என்பதை அவர்தான் முடிவு செய்வார், கூட்டணி உள்ளதா இல்லையா அவர் தான் அறிவிப்பார் என மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைத்தலைவர் மௌரியா தெரிவித்தார்.
கோவை மண்டல மக்கள் நீதி மையத்தின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள மணி மஹாலில் நடைபெற்றது மாநில செயலாளர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணைத் தலைவர்கள் மௌரியா,தங்கவேலு, மயில்சாமி,அனுஷா ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கோவை மண்டலத்தில் உள்ள ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர்கள் வெற்றிபெற பாடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.மேலும் மக்கள் நீதி மையத்தில் தலைவர் அறிவிக்கும் வேட்பாளருக்கு கட்சியினர் முழு ஆதரவை தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில துணைத்தலைவர் மௌரியா செய்தியாளரிடம் பேசுகையில் மாநில தலைமை அலுவலகத்தில் இருந்து வந்துள்ள தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்தவர்கள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர் எனவும் தேர்தல் வழிமுறைகள் குறித்தும் தேர்தல் பணி குறித்தும் அதற்கான வழிமுறைகள் வகுக்கவும் கட்சியினருக்கு இந்த கூட்டத்தின் மூலம் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.இந்த கூட்டத்தில் நாங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பாக கோவை மண்டலத்தில் உள்ள ஐந்து பாராளுமன்ற தொகுதியிலும் எவ்வாறு கட்சி பணி செய்ய வேண்டும் தேர்தல் பணியாற்ற வேண்டும் ஒன்றிணைந்து பணியை செய்ய வேண்டும் என நுணுக்கமாக அறிவுரைகளை வழங்கியுள்ளோம் என தெரிவித்தார்.
தேர்தல் பணிக்கான வியூகத்தை வகுத்து கூறியுள்ளதாகவும் அதன்படி செயல்பட்டு நிர்வாகிகள் வெற்றியை பரிசளிப்பார்கள் என்றவர், யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என எந்த முடிவும் நாங்கள் செய்யவில்லை கட்சியின் தலைவர் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்வார் என தெரிவித்தார்.கூட்டணியை பற்றி எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை என்றவர் தலைவர் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் எத்தனை தொகுதி என்பதை அவர்தான் முடிவு செய்வார் என்றவர் கூட்டணி உள்ளதா இல்லையா என்பதை கமலஹாசன் தான் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.