நீலகேசி அம்மன் கோவிலில் கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சி

குலசேகரத்தில் இட்டகவேலி முடிப்புரை நீலகேசி அம்மன் கோவிலில் கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Update: 2024-03-26 04:24 GMT

குலசேகரத்தில் இட்டகவேலி முடிப்புரை நீலகேசி அம்மன் கோவிலில் கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


குலசேகரம் இட்டக வேலி முடிப்புரை நீல கேசி அம்மன் கோவிலில் 10 நாள் அம்மயிறக்க திரு விழா கடந்த 17 ம் தேதி துவங்கியது. 23ம் தேதி தூக்க நேர்ச்சை நடந்தது. இதில், 150 குழந்தை களுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கமுகின் மூட்டில் பூஜை நடந்தது. அதன் பின் கமுகை வேரோடு பிடுங்கி எடுத்து மூட்டு பகுதியை அம்மன் பக்தர்களும், கொண்டை பகுதியை இட்டகவேலி குடும்பத்தார் இழுத்து ஒருவழியாக இறுதியாக கோவில் அருகில் உள்ள குளத்திற்குள் கொண்டு சென்றனர் குளத்தில் இருதரப்பினரும் போட்டி போட்டு இழுத்தனர்.இறுதியாக அம்மன் பக்தர்கள் வெற்றி பெற்றனர் இதைத்தொடர்ந்து கோவில் முன்பு அந்த கமுகை நாட்டி அதன் உச்சியில் தீபம் ஏற்றினார்

Tags:    

Similar News