கனகாம்பரம் விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி

அரூர் சுற்றுவட்டார பகுதியில் கனகாம்பரம் விளைச்சல் அதிகரித்து உள்ள நிலையில், விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-04-28 03:55 GMT

தர்மபுரி மாவட்டம் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட இருமத்தூர், பொம்மிடி, கடத்தூர், தீர்த்தமலை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் மலர் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக மல்லிகை, சம்பங்கி, செண்டுமல்லி, செவ்வந்தி, ரோஜா மற்றும் கனகாம்பரம் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கரில் தினசரி 2 கிலோ வரையிலும் பூக்கள் கிடைக்கிறது. கடந்த வாரம் கனகாம்பரம் கிலோ 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையிலும் விற்பனையானது. சித்திரை மாதத்தையொட்டி, கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் திருவிழாக்கள் உள்ளிட்ட விஷேசங்கள் நடைபெறுவதால் நேற்று கனகாம்பரம் விலை உயர்ந்தது. கிலோ 500 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்

Tags:    

Similar News