கழிப்பறையாக மாறிய காஞ்சி பேருந்து நிலையம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள காலியிடம் வெட்டவெளி சிறுநீர் கழிக்கும் இடமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
Update: 2024-02-21 07:42 GMT
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், தாம்பரம் செல்லும் பேருந்துகள் நிற்கும் எதிரில் உள்ள காலியிடம் சிறுநீர் கழிக்கும் இடமாக மாறியுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் மட்டுமின்றி, நடைபாதை வியாபாரிகள், நேர காப்பாளர் அலுவலக ஊழியர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால், பேருந்து நிலையத்தில் தொற்றுநோய் பரவும் சூழல் உள்ளது. எனவே, சிறுநீர் கழிக்கும் இடத்தில், கடைகள் அமைத்து, வாடகைக்கு விட்டால், மாநகராட்சிக்கும் வருவாய் கிடைக்கும். அப்பகுதியும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும். எனவே, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.