காஞ்சி ராஜ குபேரர் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் கோலாகலம்!
காஞ்சிபுரம் குபேரப்பட்டிணத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராஜகுபேரர் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
Update: 2024-04-22 14:31 GMT
காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் குபேரப்பட்டிணத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராஜகுபேரர் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.. இக்கோயிலில் இன்று காலை 8.40 மணிக்கு ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகமும்,இதனையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி 3 யாககுண்டங்கள்,151 கலசங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு சென்னை வடபழனி கோயில் அர்ச்சகர் சௌந்தர்ராஜன் தலைமையிலான 11 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினர். யாசாலை பூஜைகள் சனிக்கிழமை மாலையில் தொடங்கி சிறப்பாக நடைபெற்று இறுதியாக பூர்ணாஹூதி நடைபெற்று கலச புறப்பாடு கோயில் திருக்கோயில் வளாகத்தை சுற்றி வந்து ராஜகோபுரம் அதனை தொடர்ந்து மூலவர் என தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் ராஜகுபேர சித்தர் சுவாமிகள் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் மோர், சர்க்கரைப் பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்களும் வழங்கப்பட்டது.