மண்டைக்காடு கோவிலில் இன்று வலிய படுக்கை பூஜை

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு வலியபடுக்கை பூஜை நடக்கிறது.;

Update: 2024-03-08 03:48 GMT
மண்டைக்காடு கோவில்
குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என பெயர் பெற்றதாகும். இங்கு விழாவின்   முக்கிய வழிபாடான மகா பூஜை என்னும் வலியபடுக்கை பூஜை இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடக்கிறது.     வலிய படுக்கை பூஜை என்பது நள்ளிரவு அம்மனுக்கு மிகவும் பிடித்தமான உணவு பதார்த்தங்களான பழம், இனிப்பு வகைகள் போன்றவை  பெரும் படையலாக படைத்து வழிபடுவது வலிய படுக்கையாகும்.        பூஜை முடிந்து இந்த படையல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த வலிய படுக்கை பூஜைகள்  மாசி கொடையின் ஆறாம் நாள் அன்றும், மீனபரணி கொடை அன்றும், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை என  வருடத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து இந்த பூஜையில்  கலந்து கொள்வார்கள்.
Tags:    

Similar News