மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் சந்தனகுட ஊர்வலம்

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி திருவிழாவையொட்டி மத்திய அரசின் அரிய மணல் ஆலை தொழிலாளர்களின் சார்பில் சந்தனக் குடம் ஊர்வலம் நடந்தது.;

Update: 2024-03-08 03:52 GMT
மணவாள குறிச்சி இந்திய மணல் ஆலை சார்பில் சந்தன குட ஊர்வலம்
.கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடை விழா  கடந்த 3ஆம் தேதி காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சியுடன் விழா நடந்து வருகிறது.    ஐந்தாம் நாளான  நேற்று காலை திருநடை திறப்பு, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் வெள்ளிப் பல்லக்கில் அம்மன் பவனி போன்றவை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் அம்மன் தங்க தேர்பவனி, மாலை 6:15 மணிக்கு மணவாளக்குறிச்சி, மத்திய அரசின் அரிய மணல் ஆலை தொழிலாளர்களின் சார்பில் நடத்திய சந்தனக் குடம் பவனி மண்டைக்காடு கோயிலில் வந்தடைந்தது. தொடர்ந்து இரவில் அத்தாழ பூஜை, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி போன்றவை நடந்தது.
Tags:    

Similar News