கன்னியாகுமரி: பள்ளிவாசலில் மோதல் - எஸ்பி அலுவலகம் முற்றுகை

கன்னியாகுமரி மீராசா ஆண்டவர் பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதில் ரமலான் சிறப்புக் குழுவினருக்கும் , ஜாக் அமைப்பினருக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ஒரு தரப்பினர் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

Update: 2024-03-17 10:01 GMT
நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் குவிந்த முஸ்லீம் மக்கள்

கன்னியாகுமரியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த இந்த பள்ளிவாசல் தற்போது வக்பு வாரியத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்ளது.      தற்போது முஸ்லீம்களின் ரமலான் நோன்பு துவங்கியதை முன்னிட்டு இப்பள்ளிவாசலில் நோன்பு துறக்கும் நோன்பாளிகளுக்கு நோன்பு கஞ்சி வழங்குவதற்கும், சிறப்புத்தொழுகை உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்வதற்கும் 12 பேர்கள் அடங்கிய “ ரமலான் சிறப்புக் குழு” ஒன்றினை அமைத்து தமிழக வக்பு வாரியம் உத்தரவிட்டது.   

  இந்நிலையில் இக்குழு செயல்பட விடாமல் ஜாக் ( ஜம்மியத்து அஹ்லில் குரான் வல்ஹதீஸ் ) என்ற அமைப்பினர் இடையூறு ஏற்படுத்தி வந்தனர்.     இதனை தொடர்ந்து ரமலான் சிறப்புக் குழு செயல்படவும் அவர்களுக்கு ரமலான் ஏற்பாடுகளை செய்வதற்கும் உரிய பாதுகாப்பு வழங்கவும் மதுரை உயர்நீதி மன்றத்தில் ரமளான் சிறப்புக்குழு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.   வழக்கினை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதி சாதி குமார் சுகுமாரன்,  நோன்பு கஞ்சி காய்ச்ச உரிய பாதுகாப்பு வழங்க கோரி குமரி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.     

  உயர்நீதி மன்றம் உத்தரவை மீறி  நோன்பு கஞ்சி வைக்க விடமாட்டோம் என “ஜாக் “ அமைப்பினர் . ரமளான் மாதத்தில் நோன்பாளிகளுக்கு நோன்பு கஞ்சி வைக்க ஜாக் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்டுத்தியுள்ளது.    ஒரு தரப்பினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டும் மற்றொரு தரப்பினர் 2 நாட்களாக  பள்ளிவாசல் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் மற்றொரு தரப்பினர் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். நீதிமன்ற ஆணை பிறப்பித்த பிறகும்  போலீசார் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News