கன்னியாகுமரி : கடலில் இறங்க தொடரும் தடை

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-14 03:21 GMT
கன்னியாகுமரியில் கடலில் இறங்க அனுமதியில்லாத காரணத்தால் வெறிச்சோடிய திரிவேணி சங்கமம்

தென்னிந்திய பெருங்கடலில் கடந்த 4, 5ம் தேதிகளில் கடுமையான சீற்றம் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் பீச்சுக்கு சுற்றுலா வந்த இடத்தில், திருச்சி தனியார் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் முடித்து, பயிற்சி டாக்டர்களாக இருந்த 5 பேர் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.   இதனால் லெமூர் பீச் மூடப்பட்டது.

அதைத்தொடர்ந்து சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் கடந்த 6ம் தேதி முதல் கடலில் இறங்கி விளையாடவோ, குளிக்கவோ சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்கும் வகையில், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்நிலையில் இன்று 8வது நாளாக கடலில் இறங்கி குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் கடலில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட படகு போக்குவரத்து வழக்கம் போல் நடந்தது.

Tags:    

Similar News