சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி
வாக்கு எண்ணிக்கை எதிரொலியால் கன்னியாகுமரி சுற்றுலா இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.;
Update: 2024-06-04 12:03 GMT
வாக்கு எண்ணிக்கை எதிரொலியால் கன்னியாகுமரி சுற்றுலா இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
கன்னியாகுமரிக்கு கடந்த 30-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை பிரதமர் மோடியின் 48 மணி நேர தியானம் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடை பெற்றதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதனால் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் நட மாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது.இதனால் இந்த ஆண்டு கோடை விடுமுறை சீசன் வியாபாரிகளுக்கு கை கொடுக்காமல் போனது. இதனால் கன்னியாகுமரி வியாபாரிகள் வியாபாரம் நடக்காத விரக்தியில் உள்ளனர்.